தோட்ட தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மண்ணெண்ணைய் வழங்க வேண்டும்

Report Print Gokulan Gokulan in சமூகம்

தோட்ட தொழிலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் மண்ணெண்ணைய் வழங்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மீன்பிடி தொழிலாளர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கு சலுகை அடிப்படையில் மானியமுறையில் மண்ணெண்ணைய் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதே போல் தோட்ட தொழிலாளர்களுக்கும் சலுகை அடிப்படையில் மண்ணெண்ணைய் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட நிலையில் மண்ணெண்ணையின் விலையும் அதிகரிக்கப்பட்டது .

இதனால் மண்ணெண்ணைய் அதிகளவில் பயன்படுத்தும் பெருந்தோட்ட மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மஸ்கெலியா பிரதேசசபையின் உப தலைவர் என்ற வகையில் எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ள சபையமர்வில் இது குறித்து பிரேரணையொன்றும் முன்வைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.