அனுருத்த பொல்கம்பொல கைது

Report Print Steephen Steephen in சமூகம்

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அனுருத்த பொல்கம்பொல குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்ட போது 8 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுருத்த பொல்கம்பொலவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்திருந்தார்.

இந்த நியமனத்திற்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால், சில தினங்களின் பின்னர் ஜனாதிபதி அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.

இவருக்கு முன்னர் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றிய பீ.திஸாநாயக்க 20 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.