குழந்தையை கொன்ற தாய், தந்தை கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - மாளிகாவத்தை, ஹிஜாரா மாவத்தையில் இரண்டு வயதான ஆண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை நேற்று உயிரிழந்த நிலையில், சக்கரையின் அளவு அதிகரித்ததால் குழந்தை இறந்து போனதாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

எனினும் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த பல்வேறு காயங்கள் காரணமாகவே மரணம் சம்பவதித்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதற்கு அமைய குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் தந்தையை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.