முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வெழுச்சியுடன் கலந்துகொள்ள அழைப்பு

Report Print Ashik in சமூகம்

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க தார்மீக தமிழின உணர்வுரிமையுடன் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ். சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் நினைவுகூரப்படவுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 18ஆம் திகதி காலை 9 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நினைவேந்தலைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கத்தினால் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சவாலும் வழி வரைபடமும் எனும் கருப்பொருளில் சிறப்பு கருத்துரையும் இடம்பெறவுள்ளது.

எனவே அனைவரையும் தமிழின உணர்வுரிமையுடன் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.