கண்டி வன்முறை: பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு கடன் தொகை அதிகரிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்ட வர்த்தக சொத்துக்களுக்காக சலுகை வட்டி வீதத்தில் வழங்க தீர்மானித்திருந்த கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அண்மையில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலினால் பாதிப்புக்கு உள்ளான வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் 500,000 ரூபாவினை அதி உச்ச அளவாக கொண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு 2018-03-20ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவெடுக்கப்பட்டது.

எனினும், குறித்த தொகையினை கொண்டு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மறுசீரமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வாறு பாதிக்கப்பட்ட வியாபார சொத்துக்களுக்காக 2 சதவீத சலுகை வட்டி வீதத்தின் கீழ் வழங்கப்படக் கூடிய அதி உச்ச கடன் தொகையாக 01 மில்லியன் ரூபாவினை வரையறுப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.