வட மாகாண தபால் நிலையங்களுக்கான வாகனங்கள் வழங்கும் நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

வடமாகாண அஞ்சல்துறையை முன்னேற்றும் நோக்கில் மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களிற்கு வாகனங்கள் கையளிக்கும் நிகழ்வு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று கலை இடம்பெற்றது.

வட பிராந்திய பிரதி தபாலதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் கலீம் பிரதம வருந்தினராக கலந்துகொண்டு இந்த வாகனங்களை வழங்கி வைத்தார்.

வட மாகாண அஞ்சல்துறையை முன்னேற்றும் நோக்கில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கோரிக்கையின்போரில் 2017ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவில் இந்த வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ். மாவட்டத்திலுள் பத்து அஞ்சல் நிலையங்களிற்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு பிரதான அஞ்சல் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகளும் இன்றைய தினம் வழங்கப்படடுள்ளதுடன் இந் நிதியில் யாழ். மாவட்டத்திலுள்ள 25 சிறிய தபால் நிலையங்களிற்கென கணணிகளும் வழங்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதன்போது வடமாகாண தபால் திணைக்களத்தினரால் அமைச்சர் அவர்கள் இங்கு விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.

அமைச்சின் செயலாளர் எம்.டி.பி.மகாஸ்முல்ல வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.