புனித ரமழான் நோன்பு நாளை மறுநாள் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

Report Print Akkash in சமூகம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு கொழும்பு, பெரிய பள்ளிவாசலின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் பிறைக்குழு தலைவர் அப்துல் ஹமீத் பஹ்த் தலைமையில் இன்று மாலை நடைபெற்றுள்ளது.

இதன்போது, நாட்டின் எப்பாகங்களிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத காரணத்தினால் ஷவ்வால் மாதத்தை நாளை தினம் 30ஆக பூர்த்தி செய்து நாளை மறுநாள் அதிகாலை புனித நோன்பை ஆரம்பிக்குமாறு பிறைக்குழு உத்தியோக பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும், இதில் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் பெரிய பள்ளிவாசல், நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் ஷாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் நாடளாவிய ரீதியில் உள்ள உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.