தென்பகுதியை அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல்: பொது மக்களுக்கு அமைச்சரின் கோரிக்கை

Report Print Murali Murali in சமூகம்

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்தப்பகுதியல் வைரஸ் காய்ச்சலே காணப்படுகிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருகிறது. சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.

நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அமைச்சர ராஜித சேனாரத்ன கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பிறந்து 6 மாதங்களேயான குழந்தைகளும் காய்ச்சலினால் பீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம் ஆகியன இந்த வைரஸ் நோய்க்கான அறிகுறி என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டது.