திடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி - வியப்பில் மக்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

நமுனுகுல மலை பகுதியில் ஆரம்பிக்கும் நில்மினி நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு வருடத்தின் பின்னர் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் வழிந்தோடும் காட்சியை பார்க்க முடிந்துள்ளமையினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதுளை, ரில்பொல, மெதகம பிரதேசத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நமுனுகுல மலையை சுற்றி நீர் வழிந்து குடாஓய சென்றடைந்து பதுளு ஓயவில் இணைகிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்வது கடினமான ஒரு விடயமாகும். நீர்வீழ்ச்சியை பார்வையிட பதுளை வேவெல்ஹின்ன வீதிக்கு சென்று மெதகம வீதியின் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு செல்ல வேண்டும்.