மின்னல் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Shalini in சமூகம்

கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், சூரியபுர - சமநல பாலத்தடியைச் சேர்ந்த 51 வயதுடைய ரத்னாயக்க முதியன்சலாகே அபேகோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் வயலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்