கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல நாணய பரிமாற்று நிறுவனங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நுழைவு பகுதியினுள் ஐந்து நாணய பரிமாற்ற கவுன்டர்களை நடத்தி செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்மைய, கொமர்ஷல் பேங்க் ஒப் சிலோன் பீ.எல்.ஸி, சம்பத் வங்கி பீ.எல்.ஸி, தோமஸ் குக் லங்கா பிரைவட் லிமிடட், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுக்கு அதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இலங்கை சுங்க பிரிவு நடத்தி செல்லப்படும் பகுதிக்கு அருகில் உள் நுழையும் பகுதியில் இந்த நாணய பரிமாற்ற கவுன்டர்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த யோசனையை சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.