காணிப் பிரச்சினையில் பெண் ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை தாக்கி காயப்படுத்திய சந்தேகநபர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜாயா நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் காணிச் சண்டையின்போது பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் குச்சவெளி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.