தமிழின படுகொலையை நினைவு கூரும் முகமாக இரத்ததான முகாம்

Report Print Navoj in சமூகம்

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையினை நினைவுகூரும் முகமாக கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(17)இரத்ததான முகாம் நடைபெற்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக இரத்ததான முகாம் நடைபெற்றுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழக அனைத்து பீடங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.