பெருமளவான இலங்கை அகதிகள் துருக்கியில் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையர்கள் உள்ளிட்ட 476 அகதிக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அகதிக் கோரிக்கையாளர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

துருக்கியின் கனாக்கலே மாகாணத்தின் ஐவாகிக் மாவட்டத்திலும், மத்திய அன்டோலியான் சிவாஸ் மாகாணத்திலும், எலிகாஸீ மாகாணத்திலும், எடிரின் மாகாணத்திலும், ஏனைய சில கிராமங்களிலும் துருக்கி பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு இந்த அகதிக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.

இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, சிரியா, எரித்திரியா, பங்களாதேஸ், ஈராக்;, மொரக்கோ உள்ளிட்ட பல நாடுகளின் அகதிக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு பிரவேசிக்கும் நோக்கில் பல்வேறு அகதிக் கோரிக்கையாளர்கள் துருக்கிக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.