இனப்படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்?

Report Print Kumar in சமூகம்

எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 70 வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும், குறித்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம் உள்ளிட்ட பிரதேசபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.