முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் செல்லும் பொதுமக்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள்

Report Print Dias Dias in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நாளைய தினம் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்து சேவை ஒழுங்கு தொடர்பில் வடமாகாண சபை அறிவித்துள்ளது.

நாளை காலை 11 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பொதுமக்கள் தமக்கேற்ற பேருந்துகளில் சென்று நினைவேந்தலின் பின்னர் அதே பேருந்தில் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.