முள்ளிவாய்க்கால் தினத்தினை நினைவு கூறுபவர்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்

Report Print Dias Dias in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ இன்று மதியம் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தீபமேந்திய ஊர்தியினை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து புலனாய்வாளர்கள் சென்றதுடன் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் புகைப்படம் எடுத்தனர்.

இதனால் சற்று பதட்டத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன், புலனாய்வாளர்களுக்கு அச்சத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு பொதுமக்கள் தயங்கி நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற பொழுதிலும் நல்லாட்சி அரசிலும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமேயுள்ளமை குறிப்பிடத்தக்கது.