யுத்தத்தில் 28, 589 படையினர் மரணம்: இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in சமூகம்

யுத்தத்தில் 28 ஆயிரத்து 589 படையினர்கள் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவரால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கையர்களும் தற்போது அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக 23ஆயிரத்து 962 இராணுவத்தினரும், ஆயிரத்து 160 கடற்படையினரும், 443 வான்படையினரும், 2 ஆயிரத்து 568 காவல்துறையினரும், 456 சிவில் பாதுகாப்பு படையினரும் உயிர்த் தியாகம் செய்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்கும் வகையில், பெற்றுக்கொண்ட வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவது முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.