படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு கடலிற்குள் வைத்து அஞ்சலி! நெகிழ வைத்த காட்சி

Report Print Navoj in சமூகம்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு மட்டக்களப்பின் வாகரை கடலிற்குள் வைத்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதன்போது சிறுமியொருவர் தீபமேற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காட்சியானது அப்பகுதியிலிருந்த பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.