இலங்கையில் வெளிநாட்டுப் பிரஜையை கொலை செய்ய முயற்சி

Report Print Steephen Steephen in சமூகம்

சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை மற்றும் உள்நாட்டு நபர் ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்த முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி கொஸ்கொடை பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்ய எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கு அமைய ஊரகஸ்ஹந்திய பிரதேசத்தில் வசித்து வரும் பிரடி என அழைக்கப்படும் ஓபாத கங்கானம்கே சமந்த சந்திரலால் என்ற நபர் ரி 56 ரக துப்பாக்கி உட்பட சில ஆயுதங்களுடன் நேற்றிவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவத்தில் கடமையாற்றி வந்த நிலையில் தப்பியோடியவர் எனவும் தற்போது வெளிநாட்டில் பதுங்கியுள்ள பாதாள உலகக்குழு தலைவருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர் என்பதுடன் போதைப்பொருள் கடத்தலுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.