சர்ச்சைக்கு இலக்காகியுள்ள மைத்திரியின் பதிவும், அதன் நீக்கமும்

Report Print Sujitha Sri in சமூகம்

உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்கள் இன்றைய துக்க தினத்தை அனுஸ்டித்து வரும் நிலையில், ஜனாதிபதியின் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய தினம் இடப்பட்ட பதிவொன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த டுவிட்டர் பதிவில் அவர் “இந்த நினைவு தினத்தில் தேசிய யுத்த வீரர்கள் மற்றும அனைத்து இலங்கை போர் வீரர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதற்கு கீழே “இலங்கையின் வெற்றி தினம்” என பொருள்படும் வகையிலான குறிச் சொல்லொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறிச் சொல்லானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், டுவிட்டரில் பிரசுரிக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டமையானது மேலும் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த இறுதி யுத்தத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் உயிரிழந்த காரணத்தினால் மே 18ஐ துக்க தினமாக தமிழர்கள் அனுஸ்டித்து வருகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மூவின மக்களுக்கும் நடுநிலையாக செயற்பட வேண்டிய நாட்டின் ஜனாதிபதியானவர், இலங்கை இராணுவத்தினருக்கு மட்டும் சார்பாக அந்த பதிவினை இட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.