இலங்கையில் கொட்டித் தீர்க்கும் அடைமழை! இளைஞனின் அதிரடி செயற்பாடு

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் நிலவும் அடைமழை காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அனர்த்த வேளையிலும் இளைஞன் ஒருவரின் செயற்பாடு அதிகளவு பேசப்படும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் அடைந்துள்ளது.

அடைமழையின் போது இளைஞன் ஒருவர் கண்காட்சி நடத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பியகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரின் புகைப்படமே ஊடக வெளியாகி பிரபலயமடைந்துள்ளது.

இடுப்பளவு நீரில் இரண்டு கால்களையும் தூக்கியவாறு விநோதமான முறையில் குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.

இந்த காட்சியை பிரான்ஸ் செய்தி சேவையில் பணியாற்றும் புகைப்பட கலைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் சேர்த்துள்ளார்.