மீனவர்களுக்கு வாக்குறுதி வழங்கிய பிரதியமைச்சர்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை - ஓட்டமாவடி பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு, நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை - ஓட்டமாவடி பிரதேச மீனவ சங்கங்கள் மற்றும் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, மீனவர்களின் பிரச்சினையை தீர்த்து தருவதாக இதன்போது கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வாக்குறுதியளித்துள்ளார்.