ஆட்ட நிர்ணய சதி: இலங்கை வீரர் தொடர்பில் தகவல் வெளியிடப்போகும் அல்ஜெசீரா

Report Print Murali Murali in சமூகம்

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் தொடர்பிலான தகவல்களை அல்ஜெசீரா தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற சிம்பாபே அணியுடனான தொடரின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதியில் குறித்த இலங்கை வீரர் தொடர்புப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2016ம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தை மாற்றியமைப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் அல்ஜெசீரா தொலைக்காட்சி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஜீவந்த குலதுங்க மற்றும் தில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவது போன்று கலந்துரையாடும் காணொளியையும் அல்ஜெசீரா தொலைக்காட்சி வெளியிட்டது.

அல்ஜெசீரா அலைவரிசை இரகசியமான முறையில் தகவல்களை தகவல்களை திரட்டி அதன் பின்னர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கையின் முன்னாள் வீரர்கள் மற்றும் மைதான முகாமையாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் மற்றுமொரு ஆட்ட நிர்ண சதி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Latest Offers