மனைவியின் செயலால் வெளிநாட்டில் இருந்து வந்த கணவர் எடுத்த விபரீத முடிவு

Report Print Dias Dias in சமூகம்

கொக்கட்டிச்சோலை - மகிழடித்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய 40 வயதுடைய ராஜூ என்பவரே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தையும், நுண்கடன் மூலம் பெற்ற பணம் மாலா வேறு ஆணுக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்து கணவர் திரும்பி வந்தவுடன், அவர் அனுப்பிய பணம் எதுவும் இல்லாததுடன், நுண்கடன் நிதி நிறுவனங்களில் இருந்து வீடு தேடி வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள்.

இந்த நிலையில் கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது அவருடைய மனைவியும், குறித்த ஆணும் ஒன்றாக இருந்ததை நேரில் பார்த்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கணவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Latest Offers