வெளிநாட்டு பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை இளைஞர்கள்! திகைத்துப் போன பெற்றோர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இளைஞர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

கண்டியில் சாதாரண பேருந்து ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் மறந்து விட்டு சென்ற பையை இளைஞர்கள் இருவர் தேடிச் சென்று கொடுத்துள்ளனர்.

குறித்த பேருந்தில் பயணித்த இளைஞர்கள் இருவரிடம் இந்த பை சிக்கியுள்ளது. இதனை அவதானித்த இளைஞர்கள் வெளிநாட்டு பெண்ணிடம் ஒப்படைந்துள்ளனர்.

இளைஞர்களின் செயற்பாட்டில் மகிழ்ச்சி அடைந்த வெளிநாட்டு பெண், சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிநாட்டு பெண்,

பெற்றோருடன் தனியார் பேருந்து ஒன்றில் நான் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றது. நான் பேருந்தில் பையை வைத்து விட்டு இருந்து இறங்கி விட்டேன். எனினும் சற்று நேரத்திலேயே எனது பை பற்றி உணர்வு வந்தது. அந்த பையில் 1000 அவுஸ்திரேலிய டொலர், கையடக்க தொலைபேசி, பாஸ்போட், ஐபேட் உட்பட பல பெறுமதியான பொருட்கள் இருந்தன.

நான் இறங்கியவுடன் பேருந்து அங்கிருந்து சென்று விட்டது. நான் என்ன செய்வதென அறியாமல், வேறு வாகனத்தில் சென்றாவது அதனை நிறுத்த நினைத்தேன். இல்லை என்றால் பேருந்துக்கு பின்னால் ஓடலாம் எனவும் நினைத்தேன்.

பேருந்து ஒரு சந்தியில் திரும்பும் போது இரண்டு இளைஞர்கள் பேருந்தில் இருந்து இறங்கினார்கள். என்னை நோக்கி ஓடி வந்தார்கள். என்னிடம் எனது பையை கொடுத்தார்கள். இதனை பார்த்த எனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இவர்களுக்கு பணம் ஏதேனும் வழங்குவோம் என பெற்றோர் கூறினார்கள். எனினும் அந்த இளைஞர்கள் பணம் எல்லாம் அவசியமில்லை என கூறி விட்டார்கள்.

இந்த இளைஞர்கள் நன்றாக ஆங்கிலம் பேசினார்கள். எங்களுக்கு உதவ வந்தமையினால் அவர்கள் பேருந்தை தவறவிட்டார்கள். மீண்டும் ஒரு பேருந்திற்காக காத்திருந்தார்கள். எங்களுடன் உணவருந்துமாறு எனது தந்தை கேட்டார். எனினும் அவர்கள் மறுத்து விட்டனர். அவர்களின் செயற்பாடு எங்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது.

உண்மையாகவே என்னால் இதனை நம்ப முடியவில்லை. அதுவொரு சொகுசு பேருந்தும் அல்ல. ஆனாலும் இந்த இளைஞர்களின் செயல் எங்களை ஆச்சரியப்படுத்தியது. இப்படியொரு சம்பவம் வேறு எங்கும் நடந்ததில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers