வவுனியாவில் விபத்து! இரண்டு இராணுவ வீரர்கள், இரு சிறுவர்கள் வைத்தியசாலையில்...

Report Print Theesan in சமூகம்

வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் (சிங்கள பிரதேச சபை முன்பாக) வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ ஜிப் வண்டி ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இராணுவ ஜிப் வண்டி வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த போது, அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சமநிலை தடுமாறி வீதியின் குறுக்கே பயணித்த போது சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக இராணுவ ஜீப் வண்டி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

இதில் சிறுவர்கள் இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு இராணு வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை ஈரற்பெரிய குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Latest Offers