திருகோணமலைக்கு அழகு சேர்க்கும் மான்கள்! வீதியில் ஏற்படும் விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

திருகோணமலை நகரத்தில் சுதந்திர வீதிகளின் மான்கள் சுற்றித் திரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் விபத்துக்குள்ளாகும் மான்களை பாதுகாப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை நகர சபை முதல்வர் நாகராசா ராசநாயகம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மான்களுக்காக பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதிகளில் கடந்த காலங்களாக உணவு தேடி செல்லும் நிலையில் தொடர்ந்து பல மான்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது.

நகரை அழகுபடுத்தும் மான்களை பாதுகாப்பதற்கு புற்களுடனான பூங்கா ஒன்று அவசியம் என குறிப்பிடப்படுகின்றது.

திருகோணமலையில் வீசப்படும் மரக்கறிகளை இந்த மான்களுக்கு உணவாக வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படுவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers