தொழிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற தச்சுத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சூடுவெந்தபுலவு பகுதியில் இன்று காலை தச்சுத் தொழிலாளியளான துரைசாமி திருநாவுக்கரசு (53 வயது) மோட்டார்சைக்களில் தொழிலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த மோட்டார்சைக்கிள் வீதியில் நின்றுகொண்டிருந்த கட்டாக்காலி மாட்டில் மோதிய நிலையில், மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பொன்னம்பலம் ஜெயக்குமார் எனும் 48 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers