இலங்கையில் பலரின் இதயங்களை உருகச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் பாசமாக வளர்த்த பூனை ஒன்றின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

தனது எஜமானியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத பூனை, உடலத்தின் கால்கள் மீது படுத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

களனி பியகம பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிவதனா என்ற பெண்மணி பெருமளவு பூனைகளை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த பூனையொன்று இந்த துயரை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரின் உடலுக்கு அருகில் படுத்திருந்துள்ளது.

தற்காலத்தில் மனிதர்கள் கூட மனிதாபிமானமாக செயற்படாத காலத்தில், பாசமாக வளர்த்த பூனையின் செயற்பாடு பலரை கண் கலங்க வைத்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Latest Offers