சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற நபருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Sumi in சமூகம்

அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றிச் சென்ற நபரொருவருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸாரால் கடந்த வாரம் அரியாலை பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது அப்பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நபரொருவர் பொலிஸாரை கண்டதும் இழுவை பெட்டியை கழற்றி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

பொலிஸார் அவரை வளைத்து பிடித்து கைது செய்ததுடன் உழவு இயந்திரத்தையும் இழுவைப் பெட்டியையும் கைப்பற்றி நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றத்தால் சந்தேகநபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.

சந்தேகநபரை 50 ஆயிரம் ரூபா தண்டமாகச் செலுத்துமாறும் மணலை பறிமுதல் செய்யுமாறும் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Latest Offers