சிங்கப்பூர் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Report Print Murali Murali in சமூகம்

பெருந்தொகையான வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த நபரிடம் இருந்து 47.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அமெரிக்க டொலர்கள், யூரோ நாணயங்கள், ஜப்பானிய யென், நோர்வேயின் க்ரோன் மற்றும் சவுதியின் ரியால் உள்ளிட்ட 47.3 மில்லியன் ரூபா பெறுமதியாக வெளிநாட்டு நாணயங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.