வில்பத்து காடழிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்டெம்பரில்

Report Print Aasim in சமூகம்

வில்பத்து பிரதேசத்தில் காடழிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பரில் வழங்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனாந்தரப் பகுதியில் காடுகளை அழித்து குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் அமைக்க ஒத்தாசை செய்ததாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட சிலர் மீது ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கின் விசாரணைகளை இன்று நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் தீர்ப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு காணப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.