வெளிவந்தது ரஜினியின் காலா படம்! சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் கைது

Report Print Shalini in சமூகம்

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ரஜினியின் காலா படத்தை சிங்கப்பூரில் இருந்து முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்த நபரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக இந்திய அரசியலிலும், சினிமாவிலும் ரஜினிகாந்த் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி வந்துள்ளார்.

தூத்துக்குடி போராட்டத்தில் பாடுகாயமடைந்தவர்களை பார்வையிடச் சென்ற இவர், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசிய வசனங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ரஜினியின் காலா படத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் தடை விதித்திருந்ததுடன், இந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இவ்வாறான நிலையில் பல தடைகளை தாண்டி காலா படம் நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் கேத்தே திரையரங்கில் இப்படத்தை பார்த்த பிரவீன் என்ற தமிழ் இளைஞர், திரையரங்கில் இருந்தபடியே படத்தை நேரடியாக 45 நிமிடங்கள் முகப்புத்தகத்தில் ஒளிபரப்பு செய்துள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த படக்குழுவினர் அந்நாட்டு பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதுடன், பிரவீனை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.