கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதியில், கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்க, அரிசி ஆலை வளாகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள மலசலகூடம் ஒன்றில் இந்த வெடிபொருட்கள் இருப்பதாக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதற்காக குறித்த பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தவுடன், குறித்த பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.