மண் மேடு சரிந்து பரிதாபமாக சிறுமி பலி

Report Print Steephen Steephen in சமூகம்
59Shares

தெரணியகலை மாலிம்பட பிரதேசத்தில் இன்று காலை வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் அங்கு இருந்த 4 வயது சிறுமி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இந்த மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாயும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதுடன் தாயும் மற்ற பிள்ளையும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என தெரணியகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் மண் மேடுகள் சரியும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புவி சரிதயவில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.