யுவதிகளை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பொலிஸாருக்கு கிடைத்த தண்டனை

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டு யுவதிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை எதிர்நோக்கி சபுகஸ்கந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு உதவியாளர் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20.6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதனை தவிர குற்றவாளிகளுக்கு தலா 70 ஆயிரம் அபராதமும் விதித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்கு தலா இரண்டு லட்சம் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் இரண்டு யுவதிகளை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை தொடர்ந்திருந்தார்.

நீண்டகால விசாரணைகளுக்கு பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு 20.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.