மடுவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: இருவர் கைது

Report Print Theesan in சமூகம்

மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகையிட்ட புலனாய்வுப் பிரிவினர், சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடா இரண்டு பெரல்களையும் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்டபெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் இணைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 3000 லீற்றர் கொண்ட தலா இரண்டு பெரல்கள் கோடாவினையும், சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணகைளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.