மேல் கொத்மலை நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் உயர்வு: மக்களுக்கு எச்சரிக்கை

Report Print Thirumal Thirumal in சமூகம்

மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியிலும், சென்.கிளயார் நீர்வீழ்ச்சியிலும் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.

அத்தோடு விமேலசுரேந்திர நீர்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியாகுவதோடு, லக்ஷபான நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.

அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் வாகன சாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொண்டுள்ளனர்.