அர்ஜூன் அலோசியஸ் நிறுவனத்திடம் மூன்று மில்லியன் பணத்தை பெற்ற இராஜாங்க அமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்

பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான டப்ளியூ.எம். மெண்டிஸ் நிறுவனம் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு மூன்று சந்தர்ப்பங்களில் தேர்தல் செலவுகளுக்காக 3 மில்லியன் ரூபாவுக்காக காசோலைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கலின் போது முறைகேடுகள் நடந்துள்ளமை மற்றும் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட முறைப்பாட்டாளர் தரப்பின் வாதங்களை முன்வைத்தார்.

சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரெசீரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ், அந்த நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர், சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.