உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Report Print Navoj in சமூகம்

உலக சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு வாழைச்சேனையில் “பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம்” என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையும், வாழைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடாத்தியுள்ளது.

குறித்த பேரணி, மீள்பாவனைக்கு உதவாதவற்றை தவிர்த்துக் கொள்வோம் என்ற எண்ணக்கருவிற்கிணங்க வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக ஆரம்பமாகி, வாழைச்சேனை சந்தை வரை சென்றுள்ளது.

பேரணியாக சென்றவர்கள் வாழைச்சேனை வியாபார நிலையங்களுக்கு சென்று கடைகளில் பயன்படுத்தப்படும் பொலித்தீன்களால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமான விழிப்புணர்வை வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முகீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிகார சபை உத்தியோகத்தர் எஸ்.தட்சாயினி, வாழைச்சேனை பிரதேச செயலக கரையோர பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.ஏ.பைறூஸ், வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.