சட்டவிரோத மது உற்பத்தி நிலையம் முற்றுகை! மூவர் கைது

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு - கருவப்பங்கேணி பகுதியில் சட்டவிரோத மதுசார உற்பத்தி மேற்கொண்ட மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி பி டி .நாகவத்தையின் வழிகாட்டலில் பொலிஸ் புலனாய்வு பிரிவு சாஜன் ஏ.ஏ. ஜெமில் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை கருவப்பங்கேணி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றுவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வீட்டின் நிலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுசார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நீண்டகாலமாக சட்டவிரோத மதுசார உற்பத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, கரடியனாறு, ஆயித்தியமலை, வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களுக்கு விநியோகித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.