94வயதுடைய முதியவரின் சாதனை

Report Print Dias Dias in சமூகம்

இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் நடத்தும் வருடாந்த போட்டியில் திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த 94வயதுடைய அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை என்ற முதியவர் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

குறித்த போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச மைதாத்தில் கடந்த 2, 3ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

இதில், அ.நோ.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும், 1924ஆம் வருடம் மட்டக்களப்பில் பிறந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை, பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.