பளை திண்மக் கழிவகற்றல் நிலைய புனரமைப்பு பணிகள் அறத்திநகர் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த திண்மக் கழிவகற்றல் நிலைய புனரமைப்பு பணிகள் பிரதேச சபை நிதியில் இருந்து 1.5 மில்லியன் ரூபா செலவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சுற்று மதில் அமைக்கவும் தவிசாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.