வவுனியா குழந்தை கடத்தல் விவகாரம்! ஹயஸ் வாகனத்துடன் 9 பேர் நேற்று கைது!

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அண்மையில் குட்சைட் வீதியிலுள்ள 8 மாத ஆண் குழந்தை அதிகாலை 2.00 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 6 மர்ம நபர்களினால் கடத்தப்பட்டு 3 தினங்களின் பின்னர் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்களைக் கைது செய்த பொலிசார், கடந்த 04ம் திகதிமேலும் ஒரு சந்தேக நபரான புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த நந்தகோபால் கோபால் (33 வயது) என்பவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நேற்றைய தினம்(08) புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து ஹயஸ் ரக வாகனத்துடன் 9 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் 12 நபர்களிடமும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.