யாழில் தேரை இழுத்த jcb இயந்­தி­ரம்! அநீதியை தாங்க முடியாமல் மூதாட்டி மரணம்

Report Print Shalini in சமூகம்

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழாவில் அப்பகுதி மக்களுக்கு சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாமல் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். வரணியை பிறப்பிடமாக கொண்ட 80 வயதுடைய மூதாட்டிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலயத்தின் தீவிர பக்தையான குறித்த மூதாட்டி, இவருடைய உறவினர்களால் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வரும் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது ஆலயத்தின் தேர் jcb இயந்­தி­ரம் மூலம் இழுக்­கப்­பட்­டதை வன்­மை­யா­கக் கண்­டித்துள்ளார்.

இதனால் குறித்த மூதாட்டி கடந்த மூன்று தினங்­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளான நிலை­யில் காணப்­பட்­ட நிலையில், உற­வி­னர்களுடன் உரை­யா­டிக் கொண்­டி­ருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்­துள்­ளார்.

மூதாட்டியை வரணி வைத்தியசாலைக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­ட பின்­னர் சாவ­கச்­சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வ­ழி­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவத்தின் போது முதலாவது சமூக வர்க்கத்தினர் என தம்மை தாமே அடையாளப்படுத்திய சிலர் குறித்த தேரின் வடத்தை பிடித்து இழுக்கும் உரிமை ஏனைய பக்தர்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தேரை இழுக்கும் சக்தி அந்த நபர்களிடம் காணப்படவில்லை. இதனால் அவர்கள் jcb இயந்திரம் மூலம் தேர்வடம் பிடித்து இழுத்திருந்தமை உலக வாழ் மக்கள் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.