குட்டியை பாதுகாக்க சிறுத்தையின் மறைமுக நகர்வு! பயத்தில் உறைந்து போன சுற்றுலா பயணிகள்

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் கும்பலாக சென்று சிறுத்தை கூட்டத்தை கண்டு சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்ததாக தெரிய வருகிறது.

தனது குட்டியை பாதுகாப்பாக கொண்டு செல்லும் நோக்கில் சிறுத்தை கூட்டம் ஒன்று வீதியை கடந்து சென்றமை, இராணுவ நகர்வு போன்று இருந்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது.

புத்தல - கதிர்காமம் செல்லும் வீதியில் சிறுத்தை கூட்டம் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

சுற்றுலா பயணிகள் குழுவொன்று வீதியில் பயணித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு சிறுத்தை கூட்டம் ஒன்று பயணித்துள்ளது.

குறித்த கூட்டத்தில் சிறுத்தை தனது குட்டிகளை அழைத்துக்கொண்டு வீதியை கடந்து சென்றுள்ளன.

வீதியின் இரண்டு பக்கங்களையும் அவதானித்து விட்டு முதல் சிறுத்தை வீதியை கடந்தவுடன் அதன் பின்னால் 3 சிறுத்தைகள் பயணித்துள்ளன.

குறித்த வீதியில் சென்றவர்கள் இதனை காணொளியாக பதிவிட்டு சமூகவலைத்தங்களில் வெளியிட்டுள்ளனர்.

வீதியில் சென்றவர் சிறுத்தை வீதியை கடக்கும் வரையில் அச்சத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.