கலேவெல - கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே மூவர் பலி

Report Print Kari in சமூகம்

கலேவெல - கொழும்பு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம் பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.

பார ஊர்தி ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கலேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.