விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது

Report Print Vethu Vethu in சமூகம்

கம்பஹா, கிடகமுல்ல பிரதேசத்தில் ஹோட்டல் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை இந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பிரபல நடிகை உட்பட 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வீட்டில் முகாமைத்துவம் மற்றும் அடையாளப்படுத்த முடியாத நிலையில் 8 ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 30 - 40 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் நிட்டம்புவ, கனேமுல்ல, யாகொட, சியம்பலாம்பிட்டிய மற்றும் தெல்கொட ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நடிகை பல்வேறு தொலைகாட்சி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், அவர் பல சமூக சேவைகளை செய்துள்ளார்.

இந்த பெண் இதற்கு முன்னரும் அந்த இடத்தில் பணி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.