இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றவர் கைது

Report Print Navoj in சமூகம்

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜெயந்தியாய பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு மாடுகள், வாகனம் உட்பட சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு நேற்று திங்கட்கிழமை மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமடியாமடு பகுதியில் இருந்து இறைச்சிக்காக அனுமதிப் பத்திரமின்றி கொண்டு வந்த நிலையில் ஜெயந்தியாய பகுதியில் வைத்து நான்கு மாடுகள், வாகனம் உட்பட சாரதியை கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஓமடியாமடு பகுதியில் இருந்து அதிக மாடுகள் இறைச்சிக்காக அனுமதிப் பத்திரம் இன்றி கொண்டு செல்லப்படுவதுடன், இப்பிரதேசத்தில் அதிக சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலும் இங்கு ஒரு மாத கால பொலிஸ் சேவை நிலையம் அமைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.